ஒரு சமயம் இந்திரன் கயிலாயம் சென்றபோது, சிவபெருமான் பூதகண வடிவத்தில் அவன்முன் தோன்றினார். இதை அறியாத இந்திரன் அவர் மீது தனது வஜ்ராயுதத்தை எறிய, சிவபெருமான் கோபம் கொண்டார். தனது தவறை அறிந்த இந்திரன் தனது குற்றத்தைப் பொறுக்கும்படி வேண்டினார். இறைவனும் அவனது குற்றத்தைப் பொருத்தருளினார். அதனால் மூலவர் 'குற்றம் பொறுத்த நாதர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'குற்றம் பொறுத்த நாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'கோல்வளையம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
சீர்காழி போல் இங்கும் முதல் தளத்தில் பார்வதி பரமேஸ்வரரையும், அதற்கு மேல் தளத்தில் சட்ட நாதரையும் தரிசிக்கலாம். கோயிலின் அருகே விநாயக நதி ஓடுகிறது.
திருஞானசம்பந்தரும், சுந்தரரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
|